search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாட் ஆஸ்ட்லே"

    வங்காளதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் டாட் ஆஸ்ட்லே சேர்க்கப்பட்டுள்ளார். #NZvBAN
    வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 0-3 என வங்காளதேசம் இழந்தது. இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது.

    இதற்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுழற்பந்து வீச்சாளர் டாட் ஆஸ்ட்லே இடம்பிடித்துள்ளார். சான்ட்னெர், அஜாஸ் பட்டேல் ஆகியோர் சேர்க்கப்படவில்லை.

    நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. கேன் வில்லியம்சன் 2. டாட் ஆஸ்ட்லே 3. டிரென்ட் போல்ட் 4. கொலின் டி கிராண்ட்ஹோம் 5. ஹென்ரி 6. டாம் லாதம் 7. ஹென்ரி நிக்கோல்ஸ் 8. ஜீத் ராவல் 9. டிம் சவுத்தி 10. ராஸ் டெய்லர் 11. நீல் வாக்னர் 12. வாட்லிங் 13. வில் யங்
    முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை இழந்துள்ள நியூசிலாந்து ஜிம்மி நீஷம், டாட் ஆஸ்ட்லே ஆகியோரை அணியில் சேர்த்துள்ளது. #NZvIND
    நியூசிலாந்து - இந்தியா இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்றுடன் முடிந்த மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை 3-0 எனக்கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில் நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம், சுழற்பந்து வீச்சாளர் டாட் ஆஸ்ட்லே அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரும் அணியில் சேர்க்கப்பட்ட நிலையில் டக் பிரேஸ்வெல், இஷ் சோதி ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.


    டாட் ஆஸ்ட்லே

    நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. கேன் வில்லியம்சன் (கேப்டன்), 2. டாட் ஆஸ்ட்லே, 3. டிரென்ட் போல்ட், 4. கொலின் டி கிராண்ட்ஹோம், 5. பெர்குசன், 6. மார்ட்டின் கப்தில், 7. மேத் ஹென்ரி, 8. டாம் லாதம், 9. கொலின் முன்ரோ, 10. ஜிம்மி நீஷம், 11. ஹென்ரி நிக்கோல்ஸ், 12. மிட்செல் சான்ட்னெர், 13. ராஸ் டெய்லர், 14. டிம் சவுத்தி.
    ×